2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில், திமுக மற்றும் காங்கிரஸ் இடையே நிலவும் இழுபறியைத் தொடர்ந்து திமுக தலைமை மார்ச் 3-ஆம் தேதியை (இன்று) இறுதி அவகாசமாக (deadline) நிர்ணயித்துள்ளது மார்ச் 16-ஆம் தேதி நடைபெறவுள்ள மாநிலங்களவைத் (Rajya Sabha) தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் மார்ச் 5-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்கு முன் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீட்டை உறுதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் திமுக உள்ளதால், இன்றைக்குள் காங்கிரஸ் தனது முடிவை அறிவிக்க வேண்டும் என திமுக கெடு விதித்துள்ளது.
திமுக தரப்பில் காங்கிரஸுக்கு 25 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை இடம் மட்டுமே ஒதுக்க முன்வந்துள்ளது. ஆனால், காங்கிரஸ் தரப்பில் 35-க்கும் மேற்பட்ட தொகுதிகள் மற்றும் இரண்டு மாநிலங்களவை இடங்களை வலியுறுத்தி வருகிறது. மார்ச் 3-ஆம் தேதியான இன்று மாலைக்குள் காங்கிரஸ் மேலிடம் இறுதி முடிவை அறிவிக்காத பட்சத்தில், திமுக தனது தனிப்பட்ட வேட்பாளர் பட்டியலையோ அல்லது அடுத்தகட்ட நடவடிக்கையையோ அறிவிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
