திடீர் திருப்பம்… “தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி”…. முடிவை அறிவித்தார்… காலையிலேயே தமிழக அரசியலில் பரபரப்பு…!

By Nanthini on பங்குனி 3, 2026

Spread the love

தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகத்துடன்  காங்கிரஸ் கூட்டணி அமைக்கப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகப் பரவி வரும் செய்திகளுக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை அதிரடியாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தவெகவுடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் ஈடுபட கட்சித் தலைமை தன்னிடம் இதுவரை எந்த அறிவுறுத்தலையும் வழங்கவில்லை என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். வதந்திகளைப் புறந்தள்ளிய அவர், காங்கிரஸ் கட்சிக்கு “பின்வாசல் அரசியல்” செய்ய வேண்டிய அவசியம் எப்போதும் இருந்ததில்லை என்றும், தங்களின் அரசியல் நிலைப்பாடு வெளிப்படையானது என்றும் கூறினார்.

தற்போதைய அரசியல் சூழலில் திமுக தலைமையிலான கூட்டணியிலேயே காங்கிரஸ் நீடிக்கிறது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்று செல்வப்பெருந்தகை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். வரும் தேர்தல்களிலும் திமுகவுடனான தங்களின் கூட்டணி தொடரும் என்பதில் மிகத் தெளிவாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தேவையற்ற யூகங்களுக்கு இடமளிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்ட அவர், தங்கள் கூட்டணி வலிமையாக இருப்பதைச் சுட்டிக்காட்டி, எதிர்க்கட்சிகளின் குழப்பங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.