திமுக இளைஞரணி வழக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு வருகின்ற ஞாயிற்றுக்கிழமை திருவண்ணாமலையில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார். இது தொடர்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், 75 ஆண்டுகளை கடந்த தமிழர்களின் மேம்பாட்டை முன்னிறுத்தி தன் அரசியல் பயணத்தை மேற்கொள்ளும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எப்போதும் பக்கபலமாக இருப்பது கழக இளைஞர் அணி தான்.
இளைஞர் அணியின் சமூக வலைத்தள பக்கங்களை நிர்வகிப்பதற்கு என்று ஒவ்வொரு கழக மாவட்டத்திலும் சமூக வலைத்தளங்களுக்கான துணை அமைப்பாளர்களை நியமித்து வருகின்றோம். ஒன்றியத்திற்கு உட்பட்ட கிளைகளிலும் நகர, பகுதி, பேரூர் மற்றும் வார்டுகளிலும் அனைத்து பாகங்களிலும் இளைஞர் அணிக்கு நிர்வாகிகளை நியமித்து உள்ளோம். இப்படி கழகத் தலைவர் வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு முழுவதும் 5 லட்சம் இளைஞரணி நிர்வாகிகளை கொண்ட வலுவான அணியாக கழக இளைஞரணி விளங்குகின்றது.
இப்படி ஐந்து லட்சம் நிர்வாகிகள் மற்றும் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் என்று வலுவான கட்டமைப்பை கொண்டு செயல்படும் இளைஞர் அமைப்பு இந்திய அளவில் திமுக இளைஞரணி மட்டுமே. இப்படி நியமிக்கப்பட்ட ஐந்து லட்சம் நிர்வாகிகளை ஒன்றிணைத்து மண்டலம் தோறும் நிர்வாகிகள் சந்திப்பை நடத்த வேண்டும் என்று கழகத் தலைவர் உத்தரவின் பெயரில் முதல் கட்டமாக வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பை டிசம்பர் 14ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4 மணியளவில் திருவண்ணாமலை கலைஞர் திடலில் நடத்த உள்ளோம்.
1.30 லட்சம் கலக இளைஞரணி நிர்வாகிகள் கூடும் பிரம்மாண்ட நிகழ்ச்சியாக இது நடைபெற உள்ளது என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் கழக தலைவரே மீண்டும் முதல்வர் ஆவார். திராவிட மாடல் ஆட்சி தொடரும் என்ற வெற்றி செய்திக்கு அடித்தளமாக இந்த இளைஞர் அணி மண்டல நிர்வாகிகள் சந்திப்பு அமையும் என்றோம் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் வருகின்ற டிசம்பர் 18ஆம் தேதி விஜய் மாபெரும் பொதுக்கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ள நிலையில் விஜய்க்கு போட்டியாக அதற்கு முன்னதாகவே டிசம்பர் 14ஆம் தேதி திமுக மிகப்பெரிய கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளது.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், எந்தவொரு கட்சிக்கும் ஆட்சி அமைக்கத் தேவையான தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், தமிழகத்தில் 'தொங்கு…
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அபார வெற்றி பெற்றுள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர்…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் தோல்வியைத் தாங்கிக் கொள்ள முடியாமல், அக்கட்சியின் தொண்டர் ஒருவர் தற்கொலைக்கு…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், தர்மபுரி தொகுதியில் வெற்றி பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் சௌமியா அன்புமணி,…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து, திமுகவில் உட்கட்சி மோதல் பகிரங்கமாக வெடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, இந்து சமய அறநிலையத்துறை…
தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் அதிக இடங்களில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அக்கட்சியின் தலைவர் விஜய் முதலமைச்சராகப்…