தமிழகத்தில் தவெக ஆட்சியைப் பிடித்ததைத் தொடர்ந்து, மாநிலத்தின் அரசியல் களம் பெரும் மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. திமுகவின் நீண்டகால கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவை தவெக பக்கம் சாய்ந்துள்ளன. குறிப்பாக, காங்கிரஸ் கட்சி எவ்வித முன்அறிவிப்பும் இன்றி தவெகவுடன் கூட்டணி அமைத்தது திமுகவினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலுக்கு முன்பு திமுக ஆதரவுடன் மாநிலங்களவை எம்.பி. பதவியைப் பெற்ற காங்கிரஸ், தற்போது தவெகவின் தயவோடு மற்றொரு பதவியை உறுதி செய்துள்ளதாக நடுநிலையாளர்கள் விமர்சிக்கின்றனர்.
காங்கிரஸின் இந்த அரசியல் நகர்வை “துரோகம்” எனச் சாடியுள்ள திமுக, தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஜூன் 8ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் இந்தியா கூட்டணிக் கூட்டத்தைப் புறக்கணிப்பதாக அதிரடியாக அறிவித்துள்ளது. காங்கிரஸ் பங்கேற்கும் எந்தவொரு கூட்டத்திலும் தங்களால் கலந்து கொள்ள முடியாது என திமுக தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளது. அதேநேரம், நீட் தேர்வு, ஒரே நாடு ஒரே தேர்தல், வக்பு சட்டத் திருத்தம் போன்ற மக்கள் நலன் சார்ந்த முக்கியப் பிரச்சினைகளில் மற்ற கட்சிகள் எடுக்கும் முயற்சிகளுக்குத் தொடர்ந்து குரல் கொடுப்போம் என்றும் திமுக குறிப்பிட்டுள்ளது.
திமுகவின் இந்தத் திடீர் புறக்கணிப்பு முடிவுக்குப் பின்னால் பாஜகவின் அரசியல் நகர்வுகள் இருக்கலாம் என்று அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். “காங்கிரஸ் இல்லாத இந்தியா” என்ற நோக்கத்தைக் கொண்ட பாஜக, இந்த உடைந்த கூட்டணியைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்த விரும்புவதாகக் கூறப்படுகிறது. மேலும், காங்கிரஸின் தலைமையைப் பிடிக்காத சமாஜ்வாடி, ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் இணைந்து, மம்தா பானர்ஜி தலைமையில் திமுக ஒரு புதிய தேசிய அளவிலான கூட்டணியை உருவாக்கத் திட்டமிட்டு வருவதாகவும் அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் கசிகின்றன.
மறுபுறம், தொகுதி மறுவரையறை போன்ற முக்கிய திட்டங்களுக்கு திமுகவின் ஆதரவை நாடும் பாஜக, அதற்குப் பிரதிபலனாக மத்திய அமைச்சரவையில் திமுகவிற்கு இடம் தர முன்வந்துள்ளதாகச் சில தகவல்கள் தீயாய்ப் பரவி வருகின்றன. அண்மைக்காலமாக நீட் தேர்வு மற்றும் எரிபொருள் விலை உயர்வு போன்ற விவகாரங்களில் மத்திய அரசை நோக்கி மு.க.ஸ்டாலின் அவர்கள் மென்மையான போக்கைக் கடைப்பிடிப்பது இக்கூட்டணி வதந்திகளுக்கு மேலும் வலுசேர்த்துள்ளது. திமுக காங்கிரஸைப் பழிவாங்க பாஜகவுடன் கைகோர்க்குமா அல்லது தனது தனித்துவத்தைப் பேணி நடுநிலை வகிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இந்தோனேசியாவைச் சேர்ந்த 24 வயதான ரெனெடா ஃபதியா (Reneta Fadhia), 62 வயதான ஒருவரைத் திருமணம் செய்து கொண்டுள்ள நிலையில்,…
தமிழ்நாடு வருவாய்த்துறை பட்டா மாறுதல் நடைமுறையில் மிக முக்கியமான அதிரடி மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. இதன்படி, நில உட்பிரிவு (Sub-division) தேவைப்படும்…
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வுடன் கூடிய ஓய்வூதியத் தொகை அவர்களின்…
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே தமிழக வெற்றிக் கழக (தவெக) நிர்வாகிகள் இருவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண், செய்தியாளர்களிடம்…
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் நகரம் தற்போது கடுமையான தண்ணீர்ப் பற்றாக்குறையால் தவித்து வரும் நிலையில், ஒட்டுமொத்தப் பொதுமக்களும் தண்ணீருக்காகத்…
திமுக ஐடி விங் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாட்டின் முதலமைச்சரைக் கடுமையாக விமரிசித்துள்ளது.…