பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு கூட்டாக சேர்ந்து மரியாதை செலுத்திய ஓபிஎஸ், செங்கோட்டையன், டிடிவி தினகரன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்கள். அப்போது ஓபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று முன்னதாக அவர் கூறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர், “பிரிந்திருக்கும் அதிமுக சக்திகள் சேரவில்லை என்றால் தான், தமிழக மக்கள் மீண்டும் திமுக ஆட்சியை தேர்தெடுப்பார்கள் என்று சொன்னேன். மீண்டும் திமுக ஆட்சி வரும் என்று நான் சொல்லவே இல்லை” என கூறினார்.
