பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு கூட்டாக சேர்ந்து மரியாதை செலுத்திய ஓபிஎஸ், செங்கோட்டையன், டிடிவி தினகரன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்கள். அப்போது பேசிய டிடிவி தினகரன், “எடப்பாடியை வீழ்த்தும் வரை ஓய மாட்டோம். காலதாமதம் காரணமாக சசிகலாவால் எங்களோடு இணைந்து இன்று வர முடியவில்லை. அவர் எங்களுடன் என்றும் உறுதுணையாக இருப்பார்.
அதிமுக எங்களுக்கு எதிரியில்லை, ஈபிஎஸ் மட்டும் தான் எங்களுடைய எதிரி. எதிர்க்கட்சி என்பதாலே ஆளுங்கட்சியை எதிர்க்கமாட்டோம். அனைத்து விவகாரத்திலும் அரசின் செயல்பாடுகளை ஆராய்ந்த பிறகே எங்களுடைய நிலைப்பாட்டை சுட்டிக்காட்டுவோம் என்று கூறியுள்ளார்.
