அறிவாலயத்தில் விஸ்வரூபம் எடுக்கும் கனிமொழி….. முதன்முறையாக வரப்போகும் அந்த வரலாற்று மாற்றம்…. ஸ்டாலின் எடுத்த முடிவால் அலறும் அறிவாலயம்….!

Spread the love

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், திமுகவில் உள்கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகளை வேகப்படுத்த கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தீவிரமாக இறங்கியுள்ளார். ஏற்கனவே ஆகஸ்ட் 28-ஆம் தேதியன்று திமுகவின் உள்கட்சி மாவட்டங்களின் எண்ணிக்கை 110-ஆக உயர்த்தப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மாவட்டச் செயலாளர்கள் பதவிக்கு பலரும் ஆவலுடன் காத்திருந்த நிலையில், இடைத்தேர்தல்கள் குறுக்கிட்டதால் அப்பணிகள் தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டன. தற்போது தாமதத்திற்கான காரணங்கள் குறித்து நிர்வாகிகள் கேள்வி எழுப்பி வரும் சூழலில், நவம்பர் 15-ஆம் தேதிக்குள் அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களையும் நியமித்துவிட தலைமை முடிவெடுத்துள்ளது.

கட்சியின் பல்வேறு அணிகளையும் வலுப்படுத்தும் பணிகள் தற்போதே வேகம் எடுத்துள்ளன. இளைஞரணியில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து உதயநிதி ஸ்டாலினுடன் ஏற்கனவே ஆலோசனைகள் நடத்தப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து மருத்துவ அணியிலும் மறுசீரமைப்பு ஆலோசனைகள் நிறைவடைந்துள்ள நிலையில், ஸ்டாலின் நேரடி பார்வையில் அடுத்த கட்ட நகர்வுகள் தீவிரமடைந்துள்ளன. வரும் 2026 சட்டசபைத் தேர்தலை எதிர்கொள்ளும் முன் கட்சியின் அடித்தள அமைப்பை முழுமையாகப் புதுப்பிப்பதே இதன் முதன்மை நோக்கமாகும்.

இதனிடையே, திமுகவின் மூத்த தலைவரும் பொதுச்செயலாளருமான துரைமுருகன் அப்பொறுப்பில் இருந்து விலகக்கூடும் என்றும், அதைத்தொடர்ந்து திமுக தலைமையில் முக்கிய மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளதாகவும் அறிவாலய வட்டாரங்களில் பேச்சுக்கள் எழுந்துள்ளன. இம்மாற்றங்களின் ஒரு பகுதியாக உதயநிதி ஸ்டாலின் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோருக்குக் கட்சியில் கூடுதல் பொறுப்புகளும் புரொமோஷனும் வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, கடந்த சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு கட்சித் தலைமையால் கனிமொழிக்குக் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. மகளிரணி சார்பில் தொடர் போராட்டங்கள் மற்றும் மாநாடுகளை முன்னின்று நடத்தி வரும் அவர், திமுகவின் வரலாற்றிலேயே ‘முதல் பெண் பொதுச்செயலாளர்’ என்ற பெருமையைப் பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு உடன்பிறப்புகள் மத்தியில் அதிகரித்துள்ளது. நவம்பர் மாதத்திற்குள் கட்சி ரீதியிலான அனைத்து முக்கிய முடிவுகளையும் எடுத்து முடிப்பதில் ஸ்டாலின் உறுதியாக இருப்பதால், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

Nanthini

Recent Posts

ஐயோ… ரீல்ஸ் மோகத்தால் நேர்ந்த விபரீதம்… கையில் பட்டாசை வெடிக்க வைத்த இளைஞருக்கு… 5.5 மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சை… பதறவைக்கும் அதிர்ச்சி சம்பவம்…!!!

சமூக வலைதளங்களில் ரீல்ஸ் வீடியோக்களைப் பதிவிடுவதற்காக இளைஞர்கள் எந்த எல்லைக்கும் செல்லத் துணிகிறார்கள். சிலர் உயரமான இடங்களில் ஏறி ஆபத்தான…

3 minutes ago

அட கடவுளே… மகனைத் தூக்கிக்கொண்டு கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்… கதறித் துடிக்கும் கணவர்… நெடுனூரில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்…!

ஃபியூச்சர் சிட்டி எல்லைக்குட்பட்ட நெடுனூர் பகுதியில் உள்ள மான்யகுடா தாண்டாவைச் சேர்ந்த அனுஷா என்ற திருமணமான பெண், பிரேம் குமார்…

20 minutes ago

உஷார் மக்களே… பெட்ரோல் பங்கில் நடக்கும் பகீர் மோசடி… ரகசியத்தை உடைத்த ஊழியர்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

மக்களின் அன்றாடப் பயணத்திற்குத் தவிர்க்க முடியாத இடமாக இருக்கும் பெட்ரோல் பங்குகளில், பணத்திற்கு ஏற்ற சரியான அளவு எரிபொருள் ஊற்றப்படுகிறதா…

39 minutes ago

விபத்துனு நினைச்சா பெருங் கொள்ளை… சினிமா பாணியில் அரங்கேறிய ரூ.14 லட்சம் ஸ்கெட்ச்… நடுரோட்டில் மோதிய ஸ்கூட்டர்… வெளியானது அதிர்ச்சி CCTV…!!

டேராடூனின் படேல் நகரில் நிகழ்ந்த துணிகரக் கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள…

8 மணத்தியாலங்கள் ago