“கைதான MLA.. சைலண்டான உதயநிதி”…. பின்னணியில் நடக்கும் மாபெரும் ஸ்கெட்ச்…. தலைதூக்கும் புதிய அரசியல் குழப்பம்….!

By Nanthini on ஆடி 23, 2026

Spread the love

திமுக எம்.எல்.ஏ-க்கள் கைது செய்யப்பட்ட நிலையில், எதிர்க்கட்சித் தலைவராக உள்ள உதயநிதி ஸ்டாலின் அவர்களை நேரில் சென்று சந்திக்காதது கட்சியினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. சொந்தக் கட்சிப் பிரதிநிதிகளுக்கே இந்த நிலை என்றால், வரும் காலங்களில் ஆளுங்கட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டி ஆட்சிக்கு எதிராக எப்படித் தீவிரமாகப் பேசுவது என்ற கேள்வியும், குழப்பமும் உடன்பிறப்புகளிடையே இப்போதே எழத் தொடங்கிவிட்டது.

தமிழகத்தில் புதிதாக ஆட்சியமைத்துள்ள தமிழக வெற்றித்துக் கழகத்திற்கு எதிராக அதிமுக போன்ற பிற எதிர்க்கட்சிகள் உடனடியாகப் போராட்டங்களை அறிவித்து களமிறங்கியுள்ள சூழலில், நமது தலைவர் உதயநிதி மட்டும் எந்தவித வலுவான நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காப்பது ஏன் என்று திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தங்களுக்குள் அதிருப்தியுடன் முணுமுணுக்கத் தொடங்கியுள்ளனர்.