என்ன சிஎம் சார் இதெல்லாம்?… விஜய் கைவசம் இருக்கும் துறையிலேயே லஞ்சமா?…. வெளியான அதிர்ச்சிப் புகார்….!

By Nanthini on ஆடி 23, 2026

Spread the love

ஊழலற்ற நிர்வாகமே இலக்கு எனத் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்து வரும் நிலையில், அவர் வசம் உள்ள நகராட்சி நிர்வாகத் துறையிலேயே சொத்து வரி விதிப்பு போன்ற அத்தியாவசியச் சேவைகளுக்கு லஞ்சம் கேட்கப்படுவதாக எழும் புகார்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

லஞ்சம் கொடுக்க மறுக்கும் சாமானிய மக்களின் விண்ணப்பங்களை அதிகாரிகள் வாரக்கணக்கில் கிடப்பில் போடுவதாகப் பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். “சொல் ஒன்று, செயல் வேறு” என்ற விமர்சனங்கள் வலுத்து வரும் சூழலில், தனது சொந்தத் துறையிலேயே மலிந்துள்ள ஊழல் முறைகேடுகள் மீது முதல்வர் விஜய் அதிரடி நடவடிக்கை எடுத்துத் தன் வாக்குறுதியைக் காப்பாற்றுவாரா என்பதே தற்போது மக்களிடையே எழுந்துள்ள மிகப்பெரிய கேள்வியாகும்.