விஜய் தலைவராக இயங்கி வரும் தமிழக வெற்றிக் கழகத்தை மிரட்டும் தொனியில் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில், விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன் தாக்கல் செய்த ஜாமின் மனுவை தூத்துக்குடி மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
இவ்வழக்கில் ஜாமின் கோரி ஏற்கெனவே சென்னை உயர் நீதிமன்றத்தில் மார்க்கண்டேயன் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கான தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டிய நீதிபதி, ஒரே வழக்கிற்கான மேல்முறையீடு உயர் நீதிமன்ற நிலுவையில் இருக்கும் சூழலில், கீழமை நீதிமன்றம் ஜாமின் வழங்க முடியாது எனக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்தார்.
