“இனிமேல் வைகோ இல்லை.. பார்க்கப்போவது வைகோ 2.0″…. து கூட்டணி கணக்கை தொடங்கிய ஆதவ் அர்ஜுனா…. அரசியலில் அடுத்த டுவிஸ்ட்….!

By Nanthini on ஆடி 31, 2026

Spread the love

தமிழக அரசியல் களத்தில் கடந்த சில தேர்தல்களாகத் திமுக கூட்டணியின் முக்கிய அங்கமாகச் செயல்பட்டு வந்த மதிமுக, 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அக்கூட்டணியில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ளது. தேர்தல் முடிவுகளுக்குப் பின் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஆளும் திமுக அரசுக்கு எதிராகத் தனது அழுத்தமான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். அதேவேளையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையிலான புதிய அரசுக்குத் தனது முழு ஆதரவை வழங்கி வரும் வைகோ, “விஜய்யின் தவெக அரசை நாங்கள் அரணாக நின்று பாதுகாப்போம்” எனப் பகிரங்கமாக அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில்தான், சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தேசிய விருது வழங்கும் விழாவில் தவெக தரப்பில் பங்கேற்ற ஆதவ் அர்ஜுனா பேசிய பேச்சு, இந்த அரசியல் மாற்றத்தை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது. விழாவில் பேசிய அவர், “நான் மாணவனாக இருந்த காலத்தில் வைகோ மற்றும் திருமாவளவன் ஆகியோரின் மேடைப் பேச்சுக்களைக் கேட்டு வளர்ந்தவன். இன்று அவர்கள் முன்னே நின்று பேசும் வாய்ப்பு கிடைத்ததை பெருமையாகக் கருதுகிறேன். ஒரு மாணவனாக இருக்கும் எனக்குள் இன்னும் அமைச்சர் என்ற எண்ணம் வரவில்லை. இனிமேல் தமிழக மக்கள் ஒரு புதிய வைகோவை, அதாவது ‘வைகோ 2.0’-வை பார்க்கப் போகிறார்கள்” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

   

மேலும் வைகோவிடம் அன்பு வேண்டுகோள் விடுத்த ஆதவ் அர்ஜுனா, “உங்களுக்கு ஒரு மகன் மட்டும் இல்லை, இனிமேல் நானும் உங்களுக்கு ஒரு மகன்தான். நாம் இருவரும் எதிர்வரும் தேர்தல்களில் இணைந்து போட்டியிட்டு 65 சதவீதத்திற்கும் அதிகமான வெற்றியைப் பதிவு செய்வோம். இப்போது நமக்குச் சொல்லிக் கொள்ளும் அளவுக்குப் பெரிய எதிரிகள் யாரும் இல்லை, அதனால்தான் கொளத்தூரிலேயே அனைத்தையும் முடிவு கட்டிவிட்டோம்” என ஆவேசமாகப் பேசினார். திமுகவுடனான உறவை முறித்துக் கொண்டு தவெகவுக்கு ஆதரவளிக்கும் வைகோவின் இந்த அதிரடி முடிவும், அவரைத் தனது வழிகாட்டியாகக் ஏற்கும் தவெகவின் அணுகுமுறையும் வரவிருக்கும் தமிழக அரசியலில் ஒரு புதிய திருப்பத்தைக் குறிப்பதாக வல்லுநர்கள் கருதுகின்றனர்.