“எனக்கும் ஒரு சீட், என் மகனுக்கும் ஒரு சீட்”… திமுகவை அதிரவைக்கும் அமைச்சர்களின் வாரிசு அரசியல்… செம ஷாக்கில் ஸ்டாலின்….!

Spread the love

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், திமுக அமைச்சர்கள் தங்களின் வாரிசுகளுக்குப் போட்டியிட வாய்ப்பு கேட்டு தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருவது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூத்த அமைச்சர்கள் பலரும் தங்கள் வாரிசுகளை அரசியலில் நிலைநிறுத்தவும், செல்வாக்கை நீட்டிக்கவும் தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திமுகவின் பொதுச்செயலாளரும் மூத்த அமைச்சருமான துரைமுருகன், தனது உடல்நலத்தைக் கருத்தில் கொண்டு அவருக்குப் பதிலாக அல்லது தனக்கு வாய்ப்பு மறுக்கப்படும் பட்சத்தில் தனது மருமகளுக்குச் சீட் கேட்கிறார். அதேபோல், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தனது மகன் கம்பனைப் போலூர் தொகுதியில் களமிறக்கத் தீவிரமாக முயற்சி செய்து வருகிறார். இதற்கு முன்னதாக, கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலேயே தனது மகனுக்கு வாய்ப்பு கேட்டு அவர் கோரியது குறிப்பிடத்தக்கது.

இவர்களுடன், விவசாயத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தனது மகன் கதிரவனைப் புவனகிரி அல்லது சிதம்பரம் தொகுதியில் நிறுத்த வாய்ப்பு கேட்டுள்ளார். வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தனது மகன் ரமேஷைச் சாத்தூர் தொகுதியில் போட்டியிட வைக்க ஆர்வம் காட்டி வருகிறார். மேலும், அமைச்சர் காந்தி தனது மகன் வினோத்திற்கும், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தனது மகன் டாக்டர் அண்ணாமலைக்கும் வாய்ப்பு கேட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

அமைச்சர்களின் இத்தகைய வாரிசு அரசியல் கோரிக்கைகள் திமுக தலைமையைத் தர்மசங்கடத்தில் ஆழ்த்தியுள்ளதாகத் தெரிகிறது. கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் வாரிசு மோகத்தில் இருப்பது, தேர்தலில் வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் தலைமையின் முடிவைச் சிக்கலாக்கியுள்ளது. இந்த விவகாரத்தில் திமுக தலைமை எத்தகைய முடிவை எடுக்கும் என்பது தற்போதைய அரசியல் சூழலில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

Nanthini

Recent Posts

“ஒரே நேரத்தில் இரண்டு பெண்களுடன் கள்ள காதல்”… 2016-ல் கணவனுக்கு நேர்ந்த அதே கதி… 2026-ல் கள்ளக்காதலியின் உடலை எரித்த காதலன்… பகீர் சம்பவம்….!

தெலுங்கானா மாநிலம், பெளகாவி மாவட்டத்தைச் சேர்ந்த பர்வதம்மா (46) என்பவருக்கும், சந்திரப்பா என்பவருக்கும் திருமணமாகி இரண்டு மகன்கள் இருந்தனர். இந்நிலையில்,…

40 seconds ago

கண்ணீர் விட்டு கதறி உயிரை விட்ட அதிமுக நிர்வாகி… பதறியடித்து ஓடிவந்த எடப்பாடி பழனிசாமி… கலங்க வைக்கும் வீடியோ…!

2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய அரசியல் சூழலில், அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சிப் பூசல்களும் பிளவுகளும் தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் மன…

7 minutes ago

“கோடிகளை கொட்டி பதவி வாங்கினாங்க”… ஸ்டாலின் – எடப்பாடி ரகசிய கூட்டணி?.. உடைத்து நொறுக்கிய தவெக அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்…!

சென்னை தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த எரிசக்தி, மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை…

12 minutes ago

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு…. 1800 பள்ளிகளில் இது இல்லையா?… சற்றுமுன் வெளியான அதிர்ச்சி தகவல்….!

தமிழகத்தில் ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், கல்வித்துறையின் தற்போதைய அவலநிலை குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்…

17 minutes ago

இது என்னப்பா புதுசா இருக்கு?… தனுஷ் அடுத்த முதலமைச்சரா?… ப்ளூ சட்டை மாறனின் ஒற்றை ட்வீட்டால் கோலிவுட்டில் வெடித்த அரசியல் பூகம்பம்…!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் அரசியலுக்கு வருவது என்பதும், அதுகுறித்த விவாதங்கள் எழுவதும் காலம் காலமாக தொடரும் ஒரு வழக்கமான…

21 minutes ago

அமித் ஷா விடுத்த அவசர அழைப்பு… டெல்லி பறக்கும் அண்ணாமலை… தமிழக அரசியலில் வெடிக்கப் போகும் அடுத்த அணுகுண்டு….!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலையின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து மீண்டும் அரசியல் வட்டாரங்களில் விவாதங்கள் சூடுபிடித்துள்ளன. இன்று…

27 minutes ago