“பாஜகவுடன் கூட்டணி? விஜய் எடுக்கப்போகும் அதிரடி முடிவு”… மாவட்டச் செயலாளர்களின் திடீர் கையெழுத்து…!

Spread the love

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தகவலாக, தமிழக வெற்றிக் கழகத்தின்  மாவட்டச் செயலாளர்கள் பாஜகவுடன் கூட்டணி அமைப்பதற்கு விருப்பம் தெரிவித்து எழுத்துப்பூர்வமாக கையெழுத்திட்டு வழங்கியுள்ள செய்தி வெளியாகியுள்ளது. கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் தேர்தல் வியூக அமைப்பாளர் விஷ்ணு ரெட்டி ஆகியோர் கூகுள் ஃபார்ம் வாயிலாக இந்த ஒப்புதலைப் பெற்றுள்ளதாகத் தெரிகிறது.

இந்த முடிவு எடுக்கப்பட்ட பின்னணியில், கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் தேர்தல் செலவுகள் குறித்த முக்கிய விவாதம் நடைபெற்றுள்ளது. ஒரு தொகுதிக்கு சுமார் ரூ.5 கோடி வரை செலவு செய்ய வேண்டியிருக்கும் என்று அறிவுறுத்தப்பட்டபோது, அவ்வளவு பெரிய தொகையைச் செலவிட வேட்பாளர்கள் இல்லை என்று மாவட்டச் செயலாளர்கள் தங்களது கவலையை வெளிப்படுத்தியுள்ளனர். இதனால் நிதி மற்றும் தேர்தல் வெற்றியை கருத்தில் கொண்டு கூட்டணி குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

கூட்டணியின் போது தங்களுக்கு மரியாதையான தொகுதிப் பங்கீடு கிடைக்க வேண்டும் என்பதோடு, விஜய்க்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் மாவட்டச் செயலாளர்கள் முன்வைத்துள்ளனர். சீட் கிடைக்காத சூழலிலும், குறைந்தது 50 தொகுதிகளிலாவது போட்டியிட வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தியுள்ளனர். ஆச்சரியமாக, சிறுபான்மையினர் பிரிவைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்களும் பாஜக கூட்டணியை ஆதரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்று மாலை டெல்லி பயணம் மேற்கொள்ளவிருக்கும் விஜய், அங்கு பாஜக தலைவர்களைச் சந்திக்க வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் பேசுகின்றன. இது வெறும் தேர்தல் கால கூட்டணி மட்டுமே என்று மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யலாம் எனவும் கட்சிக்குள் ஆலோசிக்கப்பட்டிருக்கிறது. தனது அரசியல் நகர்வுகளை மிக கவனமாக முன்னெடுத்து வரும் விஜய், நாளை டெல்லியில் எடுக்கப்போகும் முடிவு தமிழக அரசியலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Nanthini

Recent Posts

“சாலையில் பெண்களுக்குப் பாதுகாப்பே இல்லையா?”.. நடந்து சென்ற பெண்ணிடம் பைக்கில் வந்த வாலிபர் செய்த அசிங்கம்.. இணையத்தில் குவியும் கண்டனம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் பிருந்தாவனத்தில் உள்ள கிரிவலம் வரும் பாதையில் (பரிக்ரமா மார்க்) பெண்கள் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும் வகையில் ஒரு…

3 minutes ago

ஒன்றரை வயது குழந்தையைச் சுவற்றில் மோதி கொன்ற தாயின் கள்ளக்காதலன்.. எலும்புகள் உடைந்து துடிதுடித்த பிஞ்சு உயிர்.. ; மருத்துவரால் அம்பலமான உண்மை..!!

கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டம் நெடுமங்காடு பகுதியைச் சேர்ந்த அஷ்கார் (31) என்பவர், தனது மனைவி அமீனாவை வரதட்சணை கேட்டுத்…

22 minutes ago

“பெண் போலீசுக்கு ஆபாச மெசேஜ்.. ஸ்டேஷனுக்கே வந்த கணவர்.. துப்பாக்கி முனையில் மிரட்டிய இன்ஸ்பெக்டர் திலீபன்.. டிஐஜி எடுத்த அதிரடி முடிவு”..!!

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றி வந்த திலீபன், தனக்குக் கீழ் பணியாற்றும்…

33 minutes ago

ஸ்கூல் லஞ்ச் பிரேக்கில் காரில் உல்லாசம்.. “ஆசிரியரை குஷிப்படுத்தவே ஆபாச படங்கள் அனுப்பினேன்..” 17 வயது மாணவன் கொடுத்த வாக்குமூலத்தால் உறைந்த போலீஸ்..!!

ஆஸ்திரேலியாவில் திருமணமான ஆசிரியை ஒருவர் தனது பள்ளியில் படிக்கும் 17 வயது மாணவருடன் பாலியல் ரீதியாகத் தொடர்பு வைத்திருந்ததாகக் கைது…

40 minutes ago

BREAKING: திடீரென ரூ.12,000 உயர்ந்தது… தமிழக மக்களுக்கு ஷாக் நியூஸ்….!

கோடை விடுமுறை முடிந்து பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்பத் தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தின் முக்கிய நகரங்களில்…

57 minutes ago