சாதி, மத வாக்கு வங்கியை இழந்த திமுக… மேலும் 3 பேரை நியமிக்க திட்டம்.. அறிவாலய கணக்கு..? கட்சியில் பல அதிரடி மாற்றங்கள் அரங்கேறின… !!

Spread the love

சட்டமன்றத் தேர்தலில், வெறும் இரண்டாண்டுகளே ஆன விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திடம் திமுக தனது ஆட்சி அதிகாரத்தை இழந்துள்ளது. இந்த அதிரடித் தோல்விக்கான காரணங்களைக் கண்டறிய அறிவாலயம் தரப்பில் பல்வேறு கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் முடிவில், தவெக கட்சி சாதி மற்றும் மதங்களைக் கடந்து, சமூக பிரதிநிதித்துவ அடிப்படையில் வேட்பாளர்களை நிறுத்தியதால் மக்களிடையே மிகப்பெரிய அளவிலான வாக்குகளை அறுவடை செய்துள்ளது தெரியவந்துள்ளது. அதேநேரம், காலம் காலமாக இருந்து வந்த திமுகவின் பாரம்பரிய சாதி மற்றும் மத அடிப்படையிலான வாக்கு வங்கி இந்தத் தேர்தலில் கடுமையாக வீழ்ச்சி கண்டுள்ளது கட்சியின் தோல்விக்கு முக்கியக் காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

விஜய்யின் அரசியல் வருகையால், திமுகவின் மிகப்பெரிய பலமாகப் பார்க்கப்பட்ட கிறிஸ்தவ சமூகத்தின் வாக்குகள் முழுமையாகத் தவெக பக்கம் சாய்ந்துள்ளன. மேலும், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக திமுகவுடன் பயணித்து வந்த இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியும் தங்களது கூட்டணியை முறித்துக் கொண்டதால், சிறுபான்மை மக்களின் வாக்கு வங்கியில் திமுகவிற்குப் பெருத்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்த இழப்பைச் சரிசெய்து, சிறுபான்மையினரின் நம்பிக்கையை மீண்டும் பெற வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ள திமுக தலைமை, கட்சியின் கட்டமைப்பில் கிறிஸ்தவர் மற்றும் இஸ்லாமியர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆலோசித்து வருகிறது. இதற்காக தற்போது கட்சியில் 7 ஆக இருக்கும் துணைப் பொதுச்செயலாளர்களின் எண்ணிக்கையை 10 ஆக உயர்த்த ஸ்டாலின் பரிசீலித்து வருகிறார்.

தற்போது திமுகவில் முக்குலத்தோர், பட்டியலினத்தவர், கவுண்டர், அருந்ததியினர் ஆகிய சமூகங்களுக்குப் பிரதிநிதித்துவம் உள்ள நிலையில், புதிய மாற்றங்களின் மூலம் நாடார், நாயுடு மற்றும் தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தினருக்கும் துணைப் பொதுச்செயலாளர் பதவிகளில் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட உள்ளது. இதற்கிடையே, வயது மூப்பு காரணமாக பொதுச்செயலாளர் துரைமுருகனை தாமாக முன்வந்து ராஜினாமா செய்ய வலியுறுத்தப்பட்டு வருவதாகவும், அந்தப் பதவிக்கு டி.ஆர். பாலு உள்ளிட்ட மூத்த தலைவர்களிடையே கடும் போட்டி நிலவுவதாகவும் கூறப்படுகிறது. தேர்தல் ஆய்வுக் குழுக்களின் முழு அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, புதிய தலைமுறை வாக்காளர்களைக் கவரும் வகையில் திமுகவில் பல அதிரடி மாற்றங்கள் அரங்கேற உள்ளன.

Swetha

Recent Posts

அறிவாலயத்தை உலுக்கிய அந்த ஒரு போன் கால்… திமுக சீனியர்கள் திடீர் அதிர்ச்சி…. ஸ்டாலினுக்கு செந்தில் பாலாஜி கொடுத்த புதிய தலைவலி…. வெளியான பகீர் தகவல்..!

தமிழக அரசியலில் தற்போதைய ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் நடத்தப்பட்ட ரூ.35 கோடி குதிரை…

5 minutes ago

திமுகவை கதறவிட்ட விஜய்… சல்லி சல்லியாய் உடைந்த கூட்டணி… பின்னணியில் நடந்த அந்த ரகசிய பிளான்… தமிழக அரசியலில் இதுவரை இல்லாத அதிரடி திருப்பம்…!

தமிழக அரசியல் களம் எப்போதும் திமுக, அதிமுக என்ற இரு துருவங்களை மையமாகக்கொண்டே சுழன்று வந்துள்ளது. அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்.,…

11 minutes ago

“ஆட்டோ சவாரியில் நடந்த ஏமாற்றம்…? பயணி கொடுத்த ரூ50 நோட்டை பார்த்து ஓட்டுநர் செய்த அதிரடி காரியம்…! மிரண்டு போன நெட்டிசென்கள்…!!”

நாக்பூரைச் சேர்ந்த ராஜேந்திர தெம்ரே என்ற ஆட்டோ ஓட்டுநர், தமக்குத் தற்செயலாகக் கிடைத்த கூடுதல் பணத்தைக் கொண்டு செய்த நற்செயல்…

12 minutes ago

இனி ஹாஸ்பிடல் ஓட தேவையில்லை… தலைவலி, வறட்டு இருமல் முதல் வாய்வுத் தொல்லை வரை… எல்லாத்துக்கும் ‘நோ’ மாத்திரை…! இதோ உங்க கிட்சன் ரகசியம்..!”

சளி, இருமல், செரிமானக் கோளாறு போன்ற அன்றாட உடல்நலப் பிரச்சினைகளுக்கு உடனடியாக மருந்துக்கடைகளுக்கும் மருத்துவமனைக்கும் ஓடுவதைத் தவிர்த்து, நம் வீட்டு…

15 minutes ago

“ரூ. 35 கோடி பேரம்.. குடும்பத்தோடு காலி பண்ணிடுவோம்”…. எம்எல்ஏ இளையராஜா வழக்கில் திடீர் திருப்பம்…. நள்ளிரவில் வெளியான அந்த ‘எப்ஐஆர்’ ரகசியம்..!

தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த தமிழக வெற்றிக் கழகத்தின் ஊத்தங்கரை சட்டப்பேரவை உறுப்பினர் இளையராஜாவுக்கு கொலை மிரட்டல்…

17 minutes ago

திடீர் திருப்பம்…. அதிமுக MLA-க்கள் ராஜினாமா… பின்னணியில் தவெக? போட்டுடைத்த CPM…. தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள…

21 minutes ago