தமிழக அரசியல் சூழல் தற்போது விறுவிறுப்பாக இருக்கும் நிலையில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதால் முக்கிய கட்சிகள் தங்கள் ஆதரவாளர்களை உறுதிப்படுத்தும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகின்றன. அதே வேளையில் அதிமுக தன்னுடைய வலிமையை அதிகரிக்கும் புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதிமுக தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பாஜகவுடன் கூட்டணியை பேணியபடி மீண்டும் ஆட்சியை அமைப்பதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றார். இருந்தாலும் சில நிர்வாகிகள் அதிருப்தி தெரிவிப்பதால் செங்கோட்டையன் உள்ளிட்ட பலரை இபிஎஸ் கட்சியிலிருந்து நீக்கினார்.
இதனைத் தொடர்ந்து புதிய நிர்வாகிகளை கட்சியில் சேர்த்து மேலும் கட்சியை வலுப்படுத்தும் முயற்சியில் EPS இறங்கியுள்ளார். அதன்படி நாகை மாவட்டத்தில் திமுகவிலிருந்து விலகி நிர்வாகிகள் தொடர்ச்சியாக அதிமுகவில் இணைந்து வருகிறார்கள். கடந்த வாரம் திமுக நிர்வாகி செல்வி சேவியர் அதிமுகவில் இணைந்து இருந்தார். இவரைத் தொடர்ந்து இன்று திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் வினோத் திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளார். இவர்களின் இந்த இணைப்பு அப்பகுதியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. டெல்டா பகுதிகளில் கட்சியின் வலிமையை மீண்டும் நிலைநிறுத்த இபிஎஸ் புதிய வியூகம் வகுத்துள்ளார். இது ஸ்டாலினுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
தமிழக அரசியலில் தவெகவின் வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தல் வெற்றிக்கு பிந்தைய அரசியல் நகர்வுகள், தற்போதைய இடைத்தேர்தல் சூழலில் புதிய திருப்பத்தை…
மத்திய அமைச்சரவையில் சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் மீன்வளத்துறை இணை அமைச்சராகப் பதவி வகித்து வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த மூத்த…
பொதுமக்களின் குறைகளைத் தீர்க்கும் நோக்கில் தமிழக அமைச்சர்களின் அதிகாரப்பூர்வ தொடர்பு எண்கள் அண்மையில் வெளியிடப்பட்ட நிலையில், அதுவே தற்போது புதிய…
தமிழக அரசியலில் பரபரப்புக்கு பஞ்சமில்லாத சூழல் நிலவி வரும் நிலையில், அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த 4…
தமிழக சட்டமன்றத்தின் 17-ஆவது கூட்டத்தொடர் ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் விவாதத்துடன் விறுவிறுப்பாக நிறைவடைந்துள்ளது. கூட்டத்தொடரின் இறுதி நாளான…
தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் சட்டசபைக் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கி அனல்…