தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியின் போது திமுக பேச்சாளர் செந்தில்வேல் அடியாட்களுடன் சேர்ந்து பாஜகவினரை மிரட்டிய சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் நடைபெற்ற ஒரு விவாதத்தின் போது, பாஜகவினர் தன்னை கேலி செய்ததாகக் கூறி பாதியிலேயே வெளியேறிய செந்தில்வேல், பின்னர் வெளியே 50-க்கும் மேற்பட்ட குண்டர்களைத் திரட்டி வந்து வன்முறையில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. “திராவிட இயக்கத்தினர் பேசும்போது இடையூறு செய்யக்கூடாது என்ற பாடத்தை அவர்களுக்குக் கற்றுக் கொடுப்போம்” என்று அவர் மிரட்டும் வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தில், விவாதம் முடிந்து வெளியே வந்த பாஜக மாநில இளைஞரணி தலைவர் எஸ்.ஜி.சூர்யா மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது திமுக கூலிப்படையினர் கொலைவெறித் தாக்குதல் நடத்தியதாக பாஜக தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் முன்னிலையிலேயே மின் இணைப்பைத் துண்டித்துவிட்டு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இது தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சீர்குலைவின் உச்சக்கட்டம் என்றும் எஸ்.ஜி.சூர்யா குற்றம் சாட்டியுள்ளார். கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ள முடியாமல் வன்முறையைக் கையில் எடுக்கும் திமுகவின் இந்த ஜனநாயக விரோதப் போக்கு பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.
தமிழகத்தின் 17-ஆவது சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று விறுவிறுப்பாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 23-ஆம் தேதி மாநிலம்…
ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…
டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…
இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…
சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…