கும்பகோணத்தில் விபச்சார விடுதி நடத்திய வழக்கில் சிக்கிய திமுக மாவட்டப் பொறியாளர் அணி அமைப்பாளர் ராஜா ரகுபதி, கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசற்படுத்தும் வகையிலும் செயல்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இந்த சட்டவிரோதத் தொழில் குறித்து 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், ராஜா ரகுபதி உட்பட இதுவரை 3 பேரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
