தமிழக மக்களே… இன்று ஒரு நாள் மட்டுமே டைம்…. உங்க ரேஷன் கார்டு செல்லாமல் போகும்?…. உடனே இத பண்ணுங்க….!

By Nanthini on புரட்டாதி 26, 2026

Spread the love

தமிழகத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் eKYC பதிவை மேற்கொள்ள வசதியாக இன்று (செப்டம்பர் 26) சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. ரேஷன் அட்டையில் பெயர் இடம்பெற்றுள்ள ஆனால் இதுவரை விரல்ரேகை ரேகை மூலம் eKYC சான்றொப்பம் செய்யாத உறுப்பினர்கள் அனைவரும் இந்த நல்வாய்ப்பைப் பயன்படுத்தித் தங்கள் தகவல்களைப் புதுப்பித்துக் கொள்ளலாம்.

ரேஷன் விநியோகத்தில் முறைகேடுகளைத் தவிர்த்து, தகுதியான பயனாளிகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் சரியாகச் சென்றடைவதை உறுதிசெய்ய மத்திய-மாநில அரசுகளால் eKYC பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், அட்டைதாரர்கள் அனைவரும் தங்களின் ஆதார் அட்டை மற்றும் குடும்ப அட்டையுடன் அருகில் உள்ள ரேஷன் கடைகளுக்குச் சென்று இச்சிறப்பு முகாமில் விடுபட்ட eKYC பதிவை விரைவாக நிறைவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.