இடைத்தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தமிழக வெற்றிக் கழகத்தின் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்ளும் முடிவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் (CPM, CPI) கட்சிகள் வந்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது. தவெக தலைமை தங்கள் ஆட்சிக்கு ஆதரவாக மட்டுமே பேச வேண்டும் என எதிர்பார்ப்பதாகவும், அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டும் விமர்சனங்களை முன்வைத்தால் தங்களை ‘திமுகவின் கைக்கூலி’ எனச் சித்தரிப்பதாகவும் இடதுசாரிகள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.
அதோடு, முதல்வர் விஜய்யைச் சந்தித்துப் பேசுவதற்கான வாய்ப்பு மறுக்கப்படுவதாக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் இடதுசாரித் தலைவர்கள், அதன் வெளிப்பாடாகவே அரசுக்கு எதிரான தொடர் போராட்டங்களை நடத்தி வருவதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
