காலையிலேயே அதிர்ச்சி..! தவெக + காங்கிரஸ் கூட்டணி..? முக்கிய முடிவை அறிவித்தார் TVK முக்கிய புள்ளி…!!

By Soundarya on தை 3, 2026

Spread the love

தமிழக வெற்றிக் கழகம்  மற்றும் காங்கிரஸ் இடையேயான சாத்தியமான கூட்டணி குறித்த விவாதங்கள் அரசியல் வட்டாரத்தில் சூடுபிடித்துள்ளன. தவெக நிர்வாகி ஜெரால்டு ஃபெலிக்ஸ் கூறுகையில், காங்கிரஸுடன் தவெக கூட்டணி அமைந்தால், ஆட்சி அதிகாரத்தில் காங்கிரஸுக்கும் உரிய பங்கு கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார். காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி சமீபத்தில் தெரிவித்த கருத்துகள், இத்தகைய கூட்டணி அமைய வேண்டும் என்ற விருப்பத்தையே பிரதிபலிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தக் கூட்டணி தமிழகத்தில் மட்டுமல்லாமல், அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல்களிலும் காங்கிரஸின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி தமிழக அரசியல் களம் நகர்ந்து வரும் நிலையில், புதிய கூட்டணிகள் உருவாவது குறித்த இந்த பேச்சுவார்த்தை முக்கியத்துவம் பெற்றுள்ளது.