தமிழக அரசியலில் மீண்டும் புயல்…! தவெக MLA -க்களுக்கு தூண்டில் போடும் திமுக….? வெளியான ஷாக்கிங் நியூஸ்….!!

By Devi Ramu on புரட்டாதி 1, 2026

Spread the love

தமிழக வெற்றிக் கழகத்தின் தென்மாவட்டத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவரிடம், எதிர்க்கட்சியான திமுக தரப்பு ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சமூக வலைதளங்களில் தகவல் ஒன்று பரவி வருகிறது.

திண்டுக்கல்லைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவரின் பினாமிதான் இந்த டீலிங்கில் முதன்மையாக ஈடுபட்டுள்ளதாகவும், அவரிடம் உள்ள அதிக அளவிலான பணபல காரணத்தினாலேயே இந்த முக்கியமான பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

   

சமீபகாலமாக ஆட்சி கவிழும் என்று திமுகவினர் தொடர்ந்து கூறி வரும் நிலையில், தவெக சட்டமன்ற உறுப்பினரைக் குறிவைத்து நடக்கும் இந்தத் தூண்டில் அரசியல் நடவடிக்கை, தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.