ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஜாக்பாட்…! ஒரு கிலோ கோதுமை மாவு ரூ.15-க்கு வாங்கலாமா…? தமிழக அரசின் சூப்பர் பிளான்…!!

By Devi Ramu on புரட்டாதி 1, 2026

Spread the love

தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களின் அன்றாட உணவுச் செலவைக் குறைக்கும் வகையில், ரேஷன் கடைகள் மூலம் ஒரு கிலோ கோதுமை மாவை வெறும் ரூ.15-க்கு விற்பனை செய்யத் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

தற்போது வெளிச்சந்தையில் ஒரு கிலோ கோதுமை மாவு ரூ.60 முதல் ரூ.80 வரை விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களின் மாதாந்திர மளிகைக் கட்டணம் பெருமளவில் குறையும். சமீபத்திய நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட ‘பொது விநியோகத் திட்டத்தில் கோதுமை மாவு வழங்கும் முன்னோடித் திட்டத்தின்’ கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

   

இத்திட்டத்தின்படி, மத்திய அரசிடம் இருந்து கோதுமையைக் கொள்முதல் செய்து, அதனை ஆலைகளில் மாவாக அரைத்துப் பாக்கெட்டுகளில் அடைத்து ரேஷன் கடைகள் மூலம் விநியோகிக்கக் கூட்டுறவு மற்றும் உணவுப்பொருள்கள் வழங்கல் துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். பிற மாநிலங்களை விடக் குறைந்த விலையில் தரமான கோதுமை மாவை மக்களுக்கு வழங்குவதே இதன் முக்கிய நோக்கமாகும்.