தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள திமுக பல வியூகங்களை வகுத்து தயாராகி வருகிறது. ஓரணியில் தமிழ்நாடு என்ற உறுப்பினர் சேர்க்கையில் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியை செய்து வருகிறது. மறுபக்கம் கூட்டணி பேச்சு வார்த்தை மட்டுமல்லாமல் தங்கள் கட்சியை மேலும் வலுப்படுத்தும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறது. அதன்படி தற்போது வேலூர் மற்றும் திருப்பூர் மாவட்ட திமுகவில் புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதாவது வேலூர், அணைக்கட்டு, குடியாத்தம் தொகுதிகள் அடங்கிய வேலூர் தெற்கு மாவட்டத்திற்கு ஏபி நந்தகுமார் செயலாளராகவும், காட்பாடி, கே வி குப்பம் தொகுதிகளை கொண்ட வேலூர் வடக்கு மாவட்ட செயலாளராக கதிர் ஆனந்தும் நியமிக்கப்பட்டுள்ளனர். திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளராக பத்மநாதன், திருப்பூர் மேற்கு மாவட்ட செயலாளராக கே.ஈஸ்வரசாமியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
