அரியானா மாநிலம் பரிதாபாத் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி அங்குள்ள நூலகத்திற்கு தினமும் படிக்க செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். சிறுமியை வாலிபர் ஒருவர் தொடர்ந்து நோட்டமிட்டு வந்த நிலையில் அவரும் நூலகத்திற்கு சென்று வந்துள்ளார். இதனிடையே வழக்கம்போல சிறுமி நூலகத்திற்கு சென்று வந்த நிலையில் அதனை அறிந்து அங்கு காத்திருந்த வாலிபர் சிறுமியை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த சிறுமி ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்தால் பொதுமக்கள் உடனே சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார் அந்த சிறுமியிடம் விசாரணை நடத்திய போது அந்த வாலிபரை எனக்கு தெரியும், தினமும் என்னை பின்தொடர்ந்து வருவான், மனரீதியாக என்னை துன்புறுத்தினான் என்று அந்த சிறுமி கூறியுள்ளார். தற்போது அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை பார்வையிட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.
फरीदाबाद में नाबालिग़ लड़की का रास्ता रोका और कंधे में गोली मार आरोपी फरार हो गया।
सोनीपत में पूर्व पार्षद की गाड़ी रुकवाई और गोली मार दी, अस्पताल में मौत।
भिवानी के बहल में 50 वर्षीय किसान की गला रेतकर हत्या।
This is Haryana’s law and order, all happened in last 24 hours. pic.twitter.com/rUM3xV8D7D
— Rahul Yadav (@Raahulrewari) November 4, 2025
