இந்த முறை மிஸ் ஆக கூடாது….. தவெகவுக்கு செக் வைத்த திமுக…. ஜென்-ஸி தலைமுறையைக் கவர ஸ்டாலின் போட்ட மாஸ்டர் பிளான்…. அலறும் அரசியல் களம்….!

By Nanthini on ஆவணி 28, 2026

Spread the love

தமிழக அரசியலில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ள சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், ஆளுங்கட்சியாக இருந்து ஆட்சியைத் தக்கவைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட திமுகவுக்கு எதிர்பாராத சரிவை பரிசளித்துள்ளது. இத்தேர்தல் தோல்வி திமுகவை பெரும் கலக்கத்திற்கு உள்ளாக்கியுள்ள நிலையில், பிரதான போட்டியாளராக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் அசுர வளர்ச்சியும், அதிமுக மற்றும் திமுகவின் மூத்த நிர்வாகிகள் பலர் தவெகவில் இணைந்து வருவதும் அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தவெகவின் உட்கட்டமைப்பு வலுவடைந்து வரும் சூழலில், அதற்குப் போட்டியாகத் திமுகவையும் மறுசீரமைப்பு செய்து மீண்டும் வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் தீவிர நடவடிக்கைகளில் அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் இறங்கியுள்ளார்.

குறிப்பாக, வளர்ந்து வரும் ‘ஜென்-ஸி’ (Gen Z) தலைமுறை இளைஞர்களைக் கவரும் நோக்கில் திமுகவின் விதிமுறைகளில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கட்சிப் பதவிகளுக்கான வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டு, கிளைச் செயலாளருக்கு 45 வயது, பேரூர் மற்றும் நகரச் செயலாளர்களுக்கு 60 வயது, மாவட்டச் செயலாளர்களுக்கு 70 வயது என வரையறுக்கப்பட்டுள்ளது. மேலும், குறிப்பிட்ட கட்சிப் பதவிகளில் 2 அல்லது 3 முறை மட்டுமே தொடர முடியும் என்ற புதிய விதியால் பல மூத்த நிர்வாகிகளின் பதவிகள் பறிபோயுள்ளன. இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் இந்த முடிவின் மூலம் கட்சியின் கட்டமைப்பைப் புதுப்பிக்க திமுக திட்டமிட்டுள்ளது.

   

கட்சி அமைப்பை மேலும் வலுப்படுத்த, 110 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு நிர்வாகப் பிரிவுகள் பரவலாக்கப்பட்டுள்ளன. முன்னர் பல தொகுதிகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த மாவட்டச் செயலாளர்களின் அதிகாரம் குறைக்கப்பட்டு, ஒரு மாவட்டச் செயலாளருக்கு குறைந்தபட்சம் 1 முதல் அதிகபட்சமாக 3 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கி மறுசீரமைக்கப்பட்டுள்ளது. தவெகவின் ‘தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளர்’ எனும் வியூகத்திற்கு ஈடுகொடுக்கவே திமுகவில் இந்த அமைப்பு ரீதியான மாற்றங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

   

இந்த மறுசீரமைப்பு குறித்து திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் (X) தளத்தில், “2018-ஆம் ஆண்டு இதே நாளில் திமுக தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது ‘காலத்தின் மாற்றங்களுக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளாத எதுவும் நீடிப்பதில்லை; மாற்றங்கள் நம்மில் இருந்து தொடங்கட்டும்’ எனப் பேசியிருந்தேன். கழகத் தலைவராக 9-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்நாளில், கழக நலன் கருதி இந்த மறுசீரமைப்பை அறிவித்துள்ளேன். அனைவரின் துணையோடு கழகத்தை மீண்டும் வெற்றிக்கு அழைத்துச் செல்வேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். தொண்டர்களிடையே விவாதப் பொருளாக மாறியுள்ள இவரது இந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.