தோல்வி கொடுத்த பாடம்… சேகர் பாபுவின் அரசியல் கதை முடிவுக்கு வருகிறதா?… ஸ்டாலினின் ஒற்றை முடிவால் ஆடிப்போன திமுக… கொளத்தூரில் ஸ்டாலின் போட்ட செக்மேட்…!!

By Gayathri on ஆவணி 28, 2026

Spread the love

சமீபத்தில் நடைபெற்ற திமுக செயற்குழுக் கூட்டத்தில் கட்சியின் நிர்வாக அமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி, மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கையை 110 ஆக உயர்த்தவும், அவர்களுக்கு 70 வயது என்ற உச்சவரம்பை நிர்ணயிக்கவும் தீர்மானிக்கப்பட்டது. தான் கட்சித் தலைவராகப் பொறுப்பேற்று ஒன்பதாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த வேளையில், காலத்திற்கேற்ப கட்சி மாறவேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் இந்த மறுசீரமைப்புப் பட்டியலை மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். தொண்டர்களின் ஆதரவுடன் கட்சியை மீண்டும் வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லவே இந்த அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த புதிய கட்டமைப்பின்படி, தலைநகர் சென்னை மொத்தம் 10 கழக மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு, அதன்கீழ் 21 சட்டமன்றத் தொகுதிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. திமுகவின் கோட்டையாகக் கருதப்பட்ட சென்னையில், கடந்த சட்டமன்றத் தேர்தலில் கட்சி சந்தித்த பெரும் சறுக்கலே இந்த அதிரடி மாற்றங்களுக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. மொத்தமுள்ள 16 தொகுதிகளில் இரண்டில் மட்டுமே திமுக வென்றதுடன், கொளத்தூர் தொகுதியில் கட்சித் தலைவர் ஸ்டாலின் சந்தித்த எதிர்பாராத தோல்வி கட்சிக்குள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

   

இந்தத் தோல்வியின் நேரடி எதிரொலியாக, கொளத்தூர் தொகுதியின் தேர்தல் பணிகளைக் கவனித்து வந்த பி.கே.சேகர்பாபுவின் அதிகாரத்தைக் குறைக்கும் வகையில் புதிய மாவட்டப் பிரிப்பு வியூகம் அமைக்கப்பட்டுள்ளது. முன்பு கொளத்தூர், துறைமுகம் என இரண்டு முக்கியப் பகுதிகளையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த அவர், தற்போதைய மாற்றத்தால் துறைமுகம் தொகுதி அடங்கிய சென்னை கிழக்கு மாவட்டத்திற்கு மட்டுமே பொறுப்பேற்கும் நிலை உருவாகியுள்ளது. இதன்மூலம் கொளத்தூர் தொகுதியில் சேகர்பாபுவின் பிடி தளர்த்தப்பட்டுள்ளதுடன், அங்கு வெற்றி பெற்ற வி.எஸ்.பாபுவுக்கு எதிராக ஸ்டாலின் தொடர்ந்துள்ள வழக்கின் முடிவுகளும் இனிவரும் காலங்களில் சேகர்பாபுவின் அரசியல் பயணத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.