“திமுக + அதிமுக + பாஜக கூட்டணி?”…. அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் உடைத்த அதிர்ச்சி உண்மை… தமிழக அரசியலில் அரங்கேறும் மெகா சதி….!

By Nanthini on ஆடி 5, 2026

Spread the love

திமுக, அதிமுக மற்றும் பாஜக ஆகிய மூன்று கட்சிகளும் ஒரே நேர்க்கோட்டில், ஒரே குறிக்கோளுடன் ஒன்றாகப் பயணிப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழக அரசியல் களத்தில் மாறுபட்ட துருவங்களாக இருக்கும் இக்கட்சிகள், தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதற்காகக் கைகோர்த்துச் சதித் திட்டம் தீட்டியதாக அவர் சாடியுள்ளார்.

தவெக எம்எல்ஏக்களைத் தங்கள் வசம் இழுக்க நினைத்த இவர்களின் கூட்டு முயற்சி தோல்வியில் முடிந்ததால், தங்களின் தோல்வியை மறைக்கவும் விரக்தியை வெளிப்படுத்தவும் தற்போது அனைவரும் ஒன்றாக இணைந்து ஆளுநரிடம் முறையிடப் போவதாகக் கூறி நாடகமாடுகிறார்கள் என்றும் அமைச்சர் நிர்மல் குமார் தன் விமர்சனத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.