திமுக மற்றும் அதிமுக இடையே கூட்டணி உருவாகப்போவதாக வெளியாகும் தகவல்கள் முற்றிலும் வதந்தி என்றும், இது தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வகுத்த ஒரு அரசியல் வியூகம் மட்டுமே என்றும் திமுக முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் சாடியுள்ளார். பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவின் அரசியல் கூடாரத்தை முழுமையாகக் காலி செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலேயே தற்போதைய முதல்வர் விஜய் செயல்பட்டு வருவதாக விமர்சித்தார்.
மேலும், முந்தைய திமுக ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகக் குற்றம் சாட்டிய முதல்வர் விஜய், தற்போதைய தவெக ஆட்சியில் நடந்துள்ள நாகர்கோவில் லாக்கப் மரணத்திற்கு என்ன பதில் சொல்லப்போகிறார் என்றும், தவெக அரசு புதிய திட்டங்கள் எதையும் கொண்டு வராமல் திமுகவின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் வேலையை மட்டுமே செய்வதாகவும் அவர் காரசாரமாகச் சாடியுள்ளார்.
