அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க முயன்றதற்கான ஆதாரங்களை வெளியிட உள்ளதாகத் தகவல் வெளியாகியிருப்பது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுராந்தகத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜுனா, “100 எம்.எல்.ஏ-க்களைக் கூட வெல்ல முடியாத எடப்பாடி பழனிசாமியால் எப்படி மீண்டும் முதலமைச்சராக முடியும்?” என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி கடுமையாகத் தாக்கிப் பேசினார்.
ஏற்கெனவே திமுக மற்றும் அதிமுக இடையே ரகசியக் கூட்டணி முயற்சிகள் நடைபெற்றதாகக் கூறி எம்.எல்.ஏ-க்கள் சிலர் ராஜினாமா செய்திருந்த நிலையில், ஆதவ் அர்ஜுனாவின் இந்த தற்போதைய பேச்சு எரியும் நெருப்பில் நெய் வார்ப்பது போல் அமைந்துள்ளது. விரைவில் ஆதாரம் வெளியிடப்படும் என்ற இந்த அறிவிப்பு, தேர்தல் நெருங்கும் சூழலில் தமிழகக் கூட்டணி அரசியலில் புதிய புயலைக் கிளப்பியுள்ளதுடன், இரு கட்சிகளின் தொண்டர்களிடையேயும் பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது.
