4 ஆண்டு கால இன்ஸ்டாகிராம் கள்ளக்காதல்…! “அவன் கூட பேசாதம்மா…” சொல்லியும் கேட்காத தாய்… ஆத்திரத்தில் மகன் செய்த கொடூரம்…. பகீர் பின்னணி…!!

By Devi Ramu on புரட்டாதி 25, 2026

Spread the love

தெலுங்கானா மாநிலம் ஹனம் கொண்டா மாவட்டம் காசிப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாலாஜி நகர் பகுதியில், இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட கள்ளக்காதல் விவகாரத்தில் பெற்ற தாயையே மகன் கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

20 ஆண்டுகளுக்கு முன்பு சுதாகர் என்பவரைத் திருமணம் செய்த உதயஸ்ரீ என்ற 40 வயது பெண்மணிக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். கணவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வர, உதயஸ்ரீ இல்லத்தரசியாக இருந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான நபர் ஒருவருடன் உதயஸ்ரீக்குக் கள்ளத்தொடர்பு ஏற்பட்டு, அவருடன் தனிக்குடித்தனம் செல்லவும் முடிவெடுத்துள்ளார்.

   

இவிஷயம் குறித்து அறிந்த அவரது 20 வயது மகன் தொரபாபு, தாயை அறைக்குள் அழைத்துச் சென்று அந்தத் தவறான உறவைக் கைவிடுமாறு அறிவுறுத்தியுள்ளார். ஆனால் உதயஸ்ரீ அதை ஏற்க மறுத்து எதிர்த்துப் பேசியதால், கடும் ஆத்திரமடைந்த தொரபாபு தாயின் கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இக்கொடூரச் சம்பவம் குறித்துப் போலிஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான தொரபாபுவைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.