“அதிகாலையில் அதிரடி”…. திமுக MP அண்ணாதுரையை வளைத்துப் போட்ட லஞ்ச ஒழிப்புத்துறை…. ஸ்டாலினுக்கு அடுத்த அதிர்ச்சி….!

By Nanthini on புரட்டாதி 25, 2026

Spread the love

திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதி திமுக உறுப்பினர் சி.என். அண்ணாதுரையின் வீடு மற்றும் அவருக்குத் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வேங்கிக்கால் தென்றல் நகரில் அமைந்துள்ள அண்ணாதுரையின் இல்லம் உட்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில் தீவிரமாக நடைபெற்று வரும் இந்தச் சோதனையானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், எந்தக் குறிப்பிட்ட புகார் அல்லது வழக்கு தொடர்பாக இந்த லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறித்த விவரங்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.