தமிழக அரசியலில் புதிய திருப்பம்… முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்த தேமுதிக பொருளாளர் சுதீஷ்… யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்…!

By Nanthini on மார்கழி 26, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் ஏறத்தாழ பெரும்பாலான கட்சிகள் கூட்டணி முடிவுகளை அறிவித்து விட்டன. ஆனால் பாமக மற்றும் தேமுதிக விடுத்த கட்சிகள் இதுவரை கூட்டணி குறித்து அறிவிப்பை வெளியிடாமல் உள்ளன. இதனிடையே பிரேமலதா வருகின்ற ஜனவரி மாதம் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் தேமுதிக கூட்டணி குறித்து அறிவிப்பை வெளியிட உள்ளதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார். தேமுதிக யாருடன் கூட்டணி வைக்கும் என்ற எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.

இந்நிலையில் அனைத்து கட்சிகளும் எங்களுடன் தோழமையாக உள்ளன. ஆனால் கூட்டணி என கூற முடியாது என்று பிரேமலதா தெரிவித்துள்ளார். யாருடன் கூட்டணி, எத்தனை தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் யார் என்ற முழு விவரமும் ஜனவரி ஒன்பதாம் தேதி அறிவிக்கப்படும் என கூறியுள்ளார்.

   

இதனிடையே நேற்று ஒரே நாளில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் ஈபிஎஸ்சை தேமுதிக பொருளாளர் சுதீஷ் சந்தித்தார். அப்போது விஜயகாந்தின் இரண்டாம் ஆண்டு குருபூஜைக்கான அழைப்பிதழை இருவரிடமும் சுதீஷ் வழங்கினார். அதேநேரம் இது அரசியல் ரீதியிலான சந்திப்பு இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். அத்துடன் சீமான் மற்றும் விஜய் உள்ளிட்ட அரசியல் தலைவர்களுக்கும் நேரடியாக அழைப்பிதழ் வழங்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இவருடைய இந்த சந்திப்பு தற்போது அரசியலில் கவனம் பெற்றுள்ளது.