தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளதால் பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று தமிழக மக்கள் அனைவரும் மிகுந்த ஆவலோடு காத்திருக்கின்றன. இப்படியான நிலையில் பச்சரிசி, சர்க்கரை மற்றும் முழு கரும்புடன் 3000 ரூபாய் பரிசு தொகையும் வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக நம்பத் தகுந்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதுமட்டுமல்லாமல் மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் பொங்கலுக்கு முன்னதாகவே வங்கி கணக்கில் செலுத்தப்படும் எனவும் கூறப்படுகிறது. இதனால் அரசு பொங்கல் பரிசாக 4000 ரூபாய் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் செய்தி தமிழக மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
