“அதிமுக No.. பாஜக No”…. வேறு வழியின்றி உதயசூரியனிடம் சரணடைந்த பிரேமலதா… 30 சீட் கேட்டவருக்கு ஸ்டாலின் கொடுத்த ‘ஷாக்’ ட்ரீட்மென்ட்….!

By Nanthini on தை 31, 2026

Spread the love

தமிழக அரசியலில் ஒரு காலத்தில் முக்கிய சக்தியாக விளங்கிய தேமுதிக அதன் நிறுவனர் விஜயகாந்தின் மறைவுக்குப் பிறகு கடும் சவால்களைச் சந்தித்து வருகிறது. சமீபத்திய கூட்டணிப் பேச்சுவார்த்தைகளில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கையாண்ட விதம் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. திமுக, அதிமுக மற்றும் பாஜக என மூன்று தரப்பிடமும் ஒரே நேரத்தில் பேச்சுவார்த்தை நடத்தியது, கட்சியின் அரசியல் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

தொடக்கத்தில் 20 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் எனப் பெரிய பட்டியலை நீட்டிய தேமுதிக, எந்தக் கட்சியிடமிருந்தும் சாதகமான பதிலைப் பெறவில்லை. குறிப்பாக அதிமுக மற்றும் பாஜக தரப்பில் தேமுதிகவின் நிபந்தனைகள் ஏற்கப்படாததால், அக்கட்சி தனித்து விடப்படும் சூழல் உருவானது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தேமுதிகவின் இரட்டை நிலைப்பாட்டால் அதிருப்தியடைந்து பேச்சுவார்த்தையைத் துண்டித்துக் கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

   

இறுதியாக வேறு வழியின்றி திமுக கூட்டணியை நோக்கி தேமுதிக நகர்ந்துள்ளது. ஒரு காலத்தில் திமுகவையே நேரடியாக எதிர்த்து அரசியல் செய்த தேமுதிக, தற்போது வெறும் 4 அல்லது 5 தொகுதிகளைப் பெற்றுக்கொண்டு அக்கூட்டணியில் இணைய வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. 12 தொகுதிகளையாவது வழங்க வேண்டும் என்று தேமுதிக விடுத்த கோரிக்கையையும் திமுக தலைமை திட்டவட்டமாக நிராகரித்துவிட்டு, மிகக்குறைந்த எண்ணிக்கையிலான இடங்களையே ஒதுக்க முன்வந்துள்ளது.

   

இந்தச் சூழல் தேமுதிகவின் அடிமட்டத் தொண்டர்களிடையே மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கேப்டன் விஜயகாந்த் உருவாக்கி வைத்திருந்த கட்சியின் கௌரவத்தையும், செல்வாக்கையும் பிரேமலதாவின் முறையற்ற கூட்டணிப் பேரங்கள் சிதைத்துவிட்டதாக அக்கட்சியின் நிர்வாகிகளே குமுறுகின்றனர். “அடிமாடாய் போன தேமுதிக” என விமர்சிக்கப்படும் நிலைக்குக் கட்சியைக் கொண்டு வந்துவிட்டதாக பிரேமலதா மீது கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.