புதுச்சேரியில் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் இலவச அரிசி வழங்கப்படுகிறது. மஞ்சள் நிற ரேஷன் கார்டுகளுக்கு 10 கிலோ அரிசியும், சிவப்பு நிற ரேஷன் கார்டுகளுக்கு 20 கிலோ அரிசியும் வழங்கப்படுகிறது. இதனால் மக்கள் பயனடைந்து வருகிறார்கள். இந்நிலையில் புதுச்சேரியில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு தீபாவளி பரிசாக, இலவச மளிகைத் தொகுப்பு வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ரேஷன் கடைகளில் எண்ணெய், ரவை, சர்க்கரை உள்ளிட்ட பொருள்கள் அடங்கிய ரூ.570 மதிப்பிலான தொகுப்பு வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். மேலும் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யும் பணி விரைவில் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
