குட் நியூஸ் மக்களே..! கந்த சஷ்டி, விடுமுறை.. தமிழகத்தில் நாளை முதல் சிறப்பு அறிவிப்பு…!!

By Soundarya on ஐப்பசி 9, 2025

Spread the love

பொதுவாக வார விடுமுறை நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அந்தவகையில் தற்போது கந்த சஷ்டி, வார விடுமுறையையொட்டி ஊர்களுக்குச் செல்ல சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, நாளை முதல் அக்டோபர் 12 ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு சென்னை உள்பட முக்கிய நகரங்களில் இருந்து கூடுதல் பேருந்துகள்  இயக்கப்படும் என போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

மேலும், அக்டோபர் 27-ம் தேதி கந்தசஷ்டி விழாவையொட்டி பிற பகுதிகளில் இருந்து திருச்செந்தூருக்கு 400 சிறப்பு பஸ்கள் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.