2026ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது வழங்கப்பட்டு எஞ்சிய வேட்டி மற்றும் சேலைகளை, தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு முதியோர் ஓய்வூதியத் திட்டப் (OAP) பயனாளர்களுக்குப் பரிசாக வழங்க முதலமைச்சர் விஜய் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ரேஷன் கடைகள் மூலமாக இந்த இலவச வேட்டி, சேலைகளை விநியோகிப்பதற்கான பணிகளை உடனடியாகத் தொடங்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏழை, எளிய முதியோர்களின் பண்டிகைக் காலத் தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு, பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. முன்னதாக, வரும் 2027ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டு மக்களுக்கு விலையில்லா வேட்டி, சேலைகள் தடையின்றி வழங்குவதை உறுதி செய்யும் வகையில், முன்கூட்டியே ரூ. 300 கோடி நிதியை ஒதுக்கி முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
