“பாஜகவிற்கு ரங்கசாமி கொடுத்த அதிர்ச்சி ட்விஸ்ட்”…. புதுச்சேரியில் அதிரடியாக நுழையும் தவெக?… நள்ளிரவு அரசியல் பரபரப்பு….!

By Nanthini on ஆடி 6, 2026

Spread the love

புதுச்சேரியில் ஆளும் என்.ஆர். காங்கிரஸ் – பாஜக கூட்டணியில் நீடித்து வரும் தொடர் மோதல் காரணமாக, புதிய சபாநாயகரைத் தேர்வு செய்வதில் தற்போதும் பெரும் இழுபறி நீடித்து வருகிறது. இந்நிலையில், பாஜக உடனான அரசியல் மோதல் முற்றினால், சமீபத்திய தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணியில் வெற்றி பெற்றுள்ள 3 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு புதிய ஆட்சியை அமைக்க முதலமைச்சர் ரங்கசாமி திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போதைய நிலவரப்படி, புதுச்சேரி சட்டமன்றத்தில் என்.ஆர். காங்கிரஸ் 12 இடங்களையும், பாஜக 4 இடங்களையும், சுயேச்சைகள் 2 இடங்களையும், அதிமுக 1 இடத்தையும் பெற்றுள்ள நிலையில், தவெக எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு ரங்கசாமிக்கு ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள ஒரு முக்கிய மாற்றுப் பாதையாக உருவெடுத்துள்ளது.