BREAKING: திடீர் திருப்பம்…. தவெக-வில் இணைகிறாரா அமைச்சர் அன்பில் மகேஸ்?… வெளியான அதிர்ச்சி தகவல்…. கதறும் உடன்பிறப்புகள்….!

By Nanthini on ஆடி 6, 2026

Spread the love

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஒரு முக்கியத் தகவலாக, முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவதற்காகத் தனக்கு நெருக்கமானவர்கள் மூலம் தூது அனுப்பியுள்ளதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. தனியார் பள்ளிகளுக்கான தடையில்லாச் சான்றிதழ் வழங்கிய விவகாரத்தில் கோடிக்கணக்கில் பணம் கையாடல் செய்யப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தற்போது பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், இந்த விவகாரத்தால் தான் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தின் காரணமாகவே அவர் இந்த அதிரடி முடிவை நோக்கி நகர்வதாக அந்தச் செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும் உதயநிதி ஸ்டாலினின் மிக நெருங்கிய நண்பராகவும், திமுகவின் முக்கியத் தூணாகவும் அறியப்படும் அன்பில் மகேஸ், அவ்வளவு எளிதாக இப்படி ஒரு மாற்று அரசியல் முடிவை எடுக்க வாய்ப்பில்லை என்றே அரசியல் விமர்சகர்கள் திட்டவட்டமாக மறுத்து வருகின்றனர்.