மாணவர்களுக்கு குஷியான செய்தி… பள்ளிகள் திறப்பு… தமிழக அரசு புதிய அதிரடி உத்தரவு…!

By Nanthini on மார்கழி 26, 2025

Spread the love

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கடந்த டிசம்பர் 10ஆம் தேதி அரையாண்டு தேர்வு தொடங்கிய நிலையில் டிசம்பர் 23ஆம் தேதி உடன் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வு முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து டிசம்பர் 24 முதல் அனைவருக்கும் அரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி நான்கு வரை மொத்தம் 12 நாட்கள் அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஜனவரி 5ஆம் தேதி தமிழக முழுவதும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன.

இந்நிலையில் பள்ளிகள் திறப்பை முன்னிட்டு அரசு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பள்ளி திறக்கப்படும் முதல் நாளே மாணவர்களுக்கு மூன்றாம் பருவ புத்தகங்கள் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாடநூல் கழகத்திலிருந்து அனைத்து மாவட்டங்களுக்கும் புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தாமதம் இன்றி புத்தகங்கள் கிடைப்பதை பள்ளி முதல்வர்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது