திடீரென தயாரிப்பாளரை நடிகராக மாற்றிய இயக்குனர் பாண்டிராஜ் – நன்றிக்கடன் பட்டதுக்காக இப்படி ஒரு ரிஸ்க் எடுக்கணுமா ப்ரோ…

By Elango on மார்கழி 26, 2025

Spread the love

தலைவன் தலைவி படத்தை தொடர்ந்து இயக்குனர் பாண்டிராஜ் ஒரு படத்தை இப்போது டைரக்ட் செய்து வருகிறார். இந்த படத்தில் ஜெயராம் ஊர்வசி ஆகியோர் நடித்து வருகின்றனர். தலைவன் தலைவி படம் ரூ. 100 கோடி வசூலித்த மாஸ் ஹிட் படமாக இருந்த நிலையில், அடுத்து இந்த படத்தை பாண்டிராஜ் இயக்க முக்கிய காரணம் வெளியாகி உள்ளது.

அதாவது இந்த படத்தை தயாரிப்பது லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவன சிஇஓவாக இருந்த தமிழ் குமரன், இப்போது அவரது சொந்த பேனரில் இந்த படத்தை தயாரிக்கிறார். இயக்குனர் பாண்டிராஜனுக்கு கடந்த காலங்களில் பொருளாதார ரீதியாக பல விதங்களில் பண உதவி செய்தவர் தமிழ் குமரன். சில சொத்துகளை பாண்டிராஜ் வாங்கிய போது அதற்கு கணிசமான தொகை தந்திருக்கிறார்.

   

அந்த உதவிகளுக்கு நன்றி கடனாக இப்போது தமிழ் குமரனின் நிறுவன தயாரிப்பில் உருவாகும் முதல் படத்தை பாண்டிராஜ் டைரக்ட் செய்கிறார். அத்துடன் இந்த படத்தில் ஒரு போலீஸ் அதிகாரி கேரக்டரில் தமிழ் குமரனை நடிக்க வைத்தும் அழகு பார்த்து மகிழ்ந்திருக்கிறார் பாண்டிராஜ் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.