இபிஎஸ்-க்கு காத்திருக்கும் மிகப்பெரிய ஆபத்து?…. ஓராண்டு கெடு விதித்த அதிருப்தி தலைவர்கள்…. அதிமுக-வில் வெடிக்கப்போகும் அடுத்த அணுகுண்டு….!

By Nanthini on ஆடி 20, 2026

Spread the love

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அதிருப்தி அணியினர் உடனடியாக எந்தவித அதிரடி நடவடிக்கைகளிலும் ஈடுபடாமல், அடுத்த ஓராண்டுக்கு அமைதியாகப் பொறுமை காக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி தரப்பைச் சேர்ந்த பல முக்கியப் புள்ளிகள் தற்போது ஈபிஎஸ் கூட்டும் ஆலோசனைக் கூட்டங்களில் தீவிரமாகப் பங்கேற்று வருவதால், அதிருப்தி அணி தற்போது பலவீனமடைந்திருப்பதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது. இருப்பினும், வரவிருக்கும் இடைத்தேர்தல்களில் அதிமுக தோல்வியைச் சந்தித்தால், அதன் முடிவுகளைப் பொறுத்து இந்த அதிருப்தி அணியினர் மீண்டும் தீவிர அரசியலில் இறங்கி சலசலப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.