“தவெக-வில் இருந்து விலகல்?”… விஜய் கட்சிக்கு செக் வைக்கும் அதிமுக டீம்?…. செங்கோட்டையன் பாணி தகவல்… சூடேறும் தமிழ்நாடு அரசியல்….!

By Nanthini on ஆடி 20, 2026

Spread the love

தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு இதுவரை கட்சிப் பொறுப்புகள் எதுவும் வழங்கப்படாததால், அவர்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. மேலும், தவெகவை நோக்கி வர நினைக்கும் மற்ற அதிமுகவினருக்கு அவர்களே தொலைபேசியில் அழைத்து வர வேண்டாம் எனக் தடுப்பதாகவும், ஏற்கெனவே இணைந்த ஒரு சிலர் கட்சியிலிருந்து விலகத் திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் பரவின.

இருப்பினும், கடந்த தேர்தலுக்கு முன்பாக மூத்த தலைவர் செங்கோட்டையன் விஷயத்திலும் இதுபோன்ற தகவல்கள் வெளியாகிப் பின்னர் அவை முற்றிலும் வதந்தி என நிரூபணமானதைச் சுட்டிக்காட்டும் அரசியல் விமர்சகர்கள், தவெக மீதான இந்தச் செய்திகளும் முற்றிலும் அடிப்படை ஆதாரமற்ற புரளியே என்று திட்டவட்டமாகக் கூறுகின்றனர்.