“திமுக போட்ட தப்புக்கணக்கு.. திருமாவுக்கு வைத்த செக்”…. கே.எஸ். அழகிரி ஓபன் டாக்…. அரசியலில் அடுத்த பூகம்பம்….!

By Nanthini on ஆடி 20, 2026

Spread the love

கூட்டணி அரசியலில் தொகுதிப் பங்கீடு குறித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் கே.எஸ். அழகிரியின் சமீபத்திய கருத்தால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தனியார் செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், தேர்தலில் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிடக் கூடாது என்று விசிக தலைவர் தொல். திருமாவளவனுக்கு திமுக அழுத்தம் கொடுத்ததாக அவர் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.

தொகுதிப் பங்கீட்டில் திமுக தவறான கணக்கீடுகளைச் செய்துவிட்டது என்று குறிப்பிட்ட அவர், புதிதாகக் கூட்டணிக்குள் இணைந்த தேமுதிகவிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டதால் கூட்டணிக் கட்சிகளிடையே பெரும் அதிருப்தியும் மனக்கசப்பும் உருவானதாகச் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், பல்வேறு சங்கடங்கள் மற்றும் முரண்பாடுகளுக்கு மத்தியில் அமைக்கப்பட்ட ஒரு கூட்டணி எப்படி தேர்தலில் முழுமையான வெற்றியைப் பெற முடியும் என்றும் கே.எஸ். அழகிரி காரசாரமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.