உத்தரப்பிரதேச மாநிலம் ஹர்தோய் பகுதியை சேர்ந்தவர் சுரேந்திர மிஸ்ராவின் மகன் அசுதோஷ் மிஸ்ரா என்ற வீரு . இவருக்கு ஊனமுற்ற நபர். இவர் திருமண தகராறில் தனது சொந்த அக்காவையே கொலை செய்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கல்லூரி முதல்வருடனான காதல் திருமணம் தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் அந்த நபர் தனது சொந்த அக்காவையே தலையில் சுட்டுக் கொன்றதாக கூறப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக மேலும் விசாரணை நடந்து வருகிறது.
பாலி காவல் நிலைய எல்லைக்குள் வரும் அலியாபூர் கிராமத்தில் புதன்கிழமை (செப்டம்பர் 03) இந்த சம்பவம் நடந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. மாற்றுத்திறனாளியான வீரு, தனது சகோதரி மான்வி மிஸ்ராவை நாட்டுத் துப்பாக்கியால் தலையில் சுட்டு சம்பவ இடத்திலேயே கொன்றதாக போலீசார் உறுதிப்படுத்தினர்.
