தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம்…. எப்படி விண்ணப்பிப்பது…?

By Nanthini on புரட்டாதி 5, 2025

Spread the love

தமிழக அரசு பள்ளி கல்லூரி மாணவர்களுக்காக ஏராளமான சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தனியார் பள்ளியில் மாணவர்கள் செல்வதை விட அரசு பள்ளியில் இருக்கும் திட்டங்களை அறிந்து மாணவர்கள் சேர்க்கையும் அதிகரித்துள்ளது. அரசுப்பள்ளி மாணவர்களின் நலனுக்காகவே ஏராளமான உதவித்தொகை திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அப்படி ஒரு திட்டம்தான் தமிழ் புதல்வன் திட்டம்.

தமிழகத்தில் தமிழ் புதல்வன் திட்டம் மூலமாக 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உயர் கல்வி செல்லும் மாணவர்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. 21 முதல் 30 வயதுக்குள் இருக்கும் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தனியார் பள்ளியில் படித்த மாணவர்கள் மற்றும் தொலைதூர கல்வி மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியாது என அரசு தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க தகுதியுடைய மாணவர்கள் https://umisdashboard.tnega என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.