Categories: சினிமா

இயக்குனர் ஆவதற்கு முன்பே நடிகர்களான வெற்றிமாறனும், மிஷ்கினும்… அதுவும் எந்த படத்தில் தெரியுமா?

Spread the love

தமிழ் சினிமாவில் இன்றிருக்கும் நம்பிக்கைக்குரிய இயக்குனர்களில் முதன்மையானவராக இருக்கிறார் வெற்றிமாறன். பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன் மற்றும் விடுதலை என குறைவான படங்களையே அவர் இயக்கி இருந்தாலும் அந்த படங்களின் தாக்கம் மிக அதிகமாக இருக்கிறது.

முன்னணி நடிகர்களை வைத்து கதையில் சமாதானங்கள் இல்லாமல் அவர் எடுக்கும் படங்கள் கமர்ஷியலாகவும் வெற்றி பெறுகின்றன. இதனால் அவர் இயக்கத்தில் நடிக்க முன்னணி நடிகர்கள் ஆசைப்படுகிறார்கள். தற்போது விடுதலை -2 படத்தை இயக்கி வரும் வெற்றிமாறன் அடுத்து சூர்யாவை வைத்து வாடிவாசல் படத்தை இயக்கவுள்ளார்.

Mysskin and Vetrimaaran

இவர், இயக்குனர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனராக வேலை செய்துள்ளார். அவர் இயக்கிய தொலைக்காட்சி தொடர்களில் பணியாற்றிய வெற்றிமாறன் உதவி இயக்குனராக வேலை செய்த முதல் திரைப்படம் இயக்குனர் கதிர் இயக்கிய ‘காதல் வைரஸ்’ திரைப்படம். இதில் அவரோடு சக உதவி இயக்குனராக வேலை செய்தவர் இயக்குனர் மிஷ்கின்.

கதிர் இயக்கிய அந்த படத்தில் அப்பாஸ், ரிச்சர்ட், ஸ்ரீதேவி உள்ளிட்ட பலர் நடிக்க, ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார். படத்தின் பாடல்கள் எல்லாம் ஹிட்டானாலும், படம் அட்டர் ப்ளாப். அந்த தோல்வி காரணமாக இயக்குனர் கதிரால் இப்போது வரை அடுத்த படம் இயக்க முடியவில்லை.

Mysskin and Vetrimaaran in Kadhal Virus

இந்த படத்தில் மிஷ்கின் மற்றும் வெற்றிமாறன் ஆகிய இருவரும் சிறு சிறு வேடங்களில் நடித்தும் உள்ளனர். மிஷ்கின் அப்போது மொட்டையடித்திருந்ததால் இப்போதைய அவரது தோற்றத்துக்கு  சம்மந்தமே இல்லாமல் இருக்கிறார். அதே போல இயக்குனர் வெற்றிமாறனும் அப்போது ஒல்லியாக மீசை தாடி இல்லாமல் கல்லூரி மாணவர் போன்ற தோற்றத்தில் இருக்கிறார். இருவரும் நடித்துள்ள காட்சிகளின் ஸ்க்ரீன்ஷாட்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

vinoth

Recent Posts

காப்பாத்துங்க…! கொழுந்துவிட்டு எரிந்த தீ… நெருப்பு வளையத்தில் சிக்கிய ஐடி அதிகாரிகள்… சினிமா பாணியில் அரங்கேறிய மாஸ் மீட்பு…!!

மும்பை சர்ச்கேட் பகுதியில் செயல்பட்டு வரும் வருமான வரித்துறை அலுவலகமான 'ஆய்கர் பவன்' கட்டிடத்தில் திங்கள்கிழமை மதியம் சுமார் 2…

5 மணத்தியாலங்கள் ago

“ஆட்டோ டயரில் நாய் சிறுநீர் கழித்ததால் வந்த வினை…” 23 வயது இளைஞர் கத்தியால் குத்தி கொலை…! சினிமாவை மிஞ்சிய பயங்கர சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் கம்மம் நகரைச் சேர்ந்த ஸ்ரீநாத் (23) என்ற இளைஞர், கடந்த 13-ஆம் தேதி இரவு தனது நண்பரின்…

5 மணத்தியாலங்கள் ago

“அப்பாவை விட்டுடுடா”கதறிய குடும்பம்… போதையில் வெறிச்செயல் செய்த பெற்ற மகன்… நடுரோட்டில் நடந்த நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்…!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மண்ணூர் பகுதியில், சொத்து தகராறில் பெற்ற மகனே லாரி ஏற்றி தந்தையைக் கொன்ற…

5 மணத்தியாலங்கள் ago

ஈரான் அளித்த அதிரடி ஆஃபர்… அமெரிக்க வீரர்கள் சிக்குனா விடாதீங்க… ஈரானியர்களுக்கு கொட்டும் பரிசு மழை… ட்ரம்ப் எடுக்க போகும் முடிவு என்ன?…

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க வீரர்களைப் பிடிப்பதற்கோ அல்லது கொல்வதற்கோ $30,000 வரை வெகுமதி வழங்கப்படும்…

5 மணத்தியாலங்கள் ago

சினிமா பாட்டு தகராறா?.. இல்லை பழிக்குப் பழியா?.. ரத்த வெள்ளத்தில் கோவில் வளாகம்… இரட்டைக் கொலையில் வெடிக்கும் புது ட்விஸ்ட்…!!

காஞ்சிபுரம் மாவட்டம் படுநெல்லி கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் கோவில் ஆடித் திருவிழாவின் போது எதிர்பாராத விதமாக கொடூரமான இரட்டைக்கொலை சம்பவம்…

5 மணத்தியாலங்கள் ago

தாயுடன் நெருக்கம்… மகனுக்கு மிரட்டல்… செல்போனை நோண்டிய போலீசுக்கு காத்திருந்த அடுத்த அதிர்ச்சி… இறுதியில் நீதிமன்றம் கொடுத்த மரண அடி…!!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த அசோக் குமார், காரைக்காலில் பணிபுரிந்தபோது அங்குள்ள திருமணமான பெண் ஒருவருடன் தகாத உறவு ஏற்படுத்திக்…

6 மணத்தியாலங்கள் ago