நான் பணியாற்றியதிலேயே அவர்தான் மோசமான இசையமைப்பாளர்… சைலண்ட் ஆள் இயக்குனர் விக்ரமனையே கோபப்படுத்தி இருக்காரே!

By vinoth on தை 6, 2025

Spread the love

தென்னிந்திய திரை உலகில் காதல் படத்தின் மூலமாக தாக்கத்தை ஏற்படுத்தியவர் இசையமைப்பாளர் ஜோஸ்வா ஸ்ரீதர். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

மணிஷர்மா உள்ளிட்டவர்களிடம் உதவியாளராக பணியாற்றிய ஜோஷ்வா ஸ்ரீதர் 2004 ஆம் ஆண்டு பரத் நடிப்பில் வெளியான காதல் திரைப்படம் மூலமாக தான் இவர் முதன்முதலாக தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார். அந்த படத்தின் பாடல்கள் பட்டிதொட்டியெல்லாம் ஹிட்டாகின.

   

அதன் பின்னர் அவர் கவனிக்கப்படும் இசையமைப்பாளர் ஆகி தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிப் படங்களுக்கு இசையமைத்தார். ஆனாலும் அவர் திடீரென்று காணாமல் போனார் . அவரின் அனுகுமுறையால்தான் அவர் சினிமாவில் ஜொலிக்க முடியவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. தற்போது அவர் சினிமாவில் இருந்து விலகி ஜோதிடம் மற்றும் பங்குச்சந்தை முதலீடு ஆகியவற்றில் ஈடுபட்டு வருகிறார்.

   

இந்நிலையில் 90 களில் முன்னணி இயக்குனராக ஜொலித்த விக்ரமன் தான் இயக்கிய சென்னைக் காதல் திரைப்படத்தில் ஜோஷ்வா ஸ்ரீதரோடு இணைந்து பணியாற்றினார். அந்த அனுபவம் குறித்து தற்போது அவர் ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.

 

அதில் “ஜோஷ்வா ஸ்ரீதர் ஒரு நல்ல இசையமைப்பாளர்தான். அவரிடம் திறமை இருக்கு. ஆனால் அவர் நடவடிக்கைகள் ரொம்ப மோசம். பாட்டு ரெடி பண்ணி ரெக்கார்டிங்குக்கு தியேட்டர் எல்லாம் புக் பண்ணிவிட்டு காத்திருந்தால் வரவே மாட்டார். போன் பண்ணினாலும் எடுக்க மாட்டார். அவரிடம் இருந்து பாடல்களை வாங்க படாத பாடு பட்டோம்.

நான் எல்லா பெரிய இசையமைப்பாளர்களோடும் வேலை செய்துள்ளேன். இளையராஜா முதல் ரஹ்மான் வரை யாருமே இப்படி இழுத்தடித்ததில்லை. அதனால் ஜோஷ்வா ஸ்ரீதர் திறமையானவராக இருந்தும் இப்போது சினிமாவில் இல்லை” எனக் கூறியுள்ளார். வழக்கமாக இயக்குனர் விக்ரமன் யாரைப் பற்றியும் பாசிட்டிவ்வான விஷயங்களையே பகிர்பவர். ஆனால் அவரே ஒருவர் மீது கோபப்பட்டுள்ளார் என்றால் எந்தளவுக்கு அவருக்கு டார்ச்சர் கொடுத்திருப்பார் என்று புரிந்து கொள்ள முடிகிறது.