அந்தப் படத்துல பிரகாஷ் ராஜ் நடிக்கமா இருந்தா படம் ஓடிருக்கும்.. ஒரே போடாய் போட்ட பிரபல இயக்குனர்..!

By Mahalakshmi on சித்திரை 29, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் அள்ளித்தந்த வானம், மொழி உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய பிரபலமானவர் விஜி. இவர் இயக்கத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் வெள்ளித்திரை என்ற திரைப்படம். மலையாள திரைப்படமான உதயணதரம் என்ற படத்தின் ரீமேக் ஆகும். இப்படத்தில் பிரித்திவிராஜ், கோபிகா, பிரகாஷ்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

   

மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் தமிழில் அந்த அளவுக்கு வரவேற்பு பெறவில்லை. பல நடிகர்கள் இப்படத்தில் நடித்திருந்தும் இந்த திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. இந்த திரைப்படம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்று இயக்குனர் விஜி பேசியிருந்தார். அதில் அவர் பல விஷயங்களை கூறியிருந்தார்.

   

 

அதாவது வெள்ளித்திரை திரைப்படத்தை எழுதிக் கொடுக்க மட்டுமே நான் இருந்தேன். ஆனால் பிரகாஷ்ராஜ் தான் என்னை வற்புறுத்தி அப்படத்தை எடுக்க வைத்தார். மேலும் அந்த திரைப்படத்தில் பிரகாஷ்ராஜ் நடிக்காமல் இருந்திருந்தால், அப்புறம் கண்டிப்பாக ஓடி இருக்கும். அந்த கதாபாத்திரத்தை இவர் முழுக்க முழுக்க வில்லனாகவே நடித்து விட்டார். இருப்பினும் அவர் எனக்கு மிகவும் சிறந்த நண்பர் பலமுறை பல நேரங்களில் எனக்கு உதவி செய்து இருக்கின்றார் என்று அவர் பேசியிருந்தார்.