ராதிகா கர்ப்பமானதை அறிந்து மனமுடைந்த பாக்கியா.. பூ கொடுத்து ரொமான்டிக்காக மாறிய பழனிச்சாமி..!

By Mahalakshmi on ஏப்ரல் 29, 2024

Spread the love

விஜய் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ராதிகா பாக்கியலட்சுமி இடம் கர்ப்பத்தினை பற்றி கூறுகிறார். இதனால் பாக்கியா அதிர்ச்சி அடைகிறார். கீழே இறங்கி வரும்போது உங்களுக்கு எதுவும் கஷ்டமாக இல்லையா என்று ராதிகா கேள்வி கேட்க இல்லை அதையெல்லாம் நினைத்து நீங்கள் கவலைப்பட வேண்டாம்.

   

உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு கீழே சென்று விடுகிறார். அப்போது எழிலும் செழியனும் பாக்கியவை சுற்றி வந்து விளையாடுகிறார்கள். குழந்தைகள் எவ்வளவு பெருசா வளர்ந்துட்டாங்க. அவங்களுக்கே குழந்தைகள் இருக்கு, இப்ப இவரு போய் குழந்தை பெத்துக்க போறாரு என்று கவலை கொள்கிறார். இப்படி யோசனையில் இருக்க அங்கு வந்த எழில் என்ன ஆச்சு என்று கேட்க ரெஸ்டாரன்ட் பத்தி நினைச்சிட்டு இருக்கேன் என்று பாக்கியா கூறிவிடுகிறார்.

   

 

அதற்கு அடுத்து ரெஸ்டாரண்டில் பழனிச்சாமி ஒரு கூடை நிறைய பூவுடன் வந்து நிற்கிறார். என்ன சார் இவ்வளவு நிறைய பூக்கள் என்று கேட்க எனது நண்பன் பூக்கடை பிசினஸ் ஒன்று தொடங்கி இருக்கிறான். அவன் கொடுத்தான், அதனால் ஒரு கூடையை வீட்டில் வைத்துவிட்டு ஒன்றை இங்கு எடுத்து வந்தேன் என்று சொல்கிறார். உடனே பூக்களை சாமி படத்திற்கு போடுங்க என்று சொல்ல ஏன் நான் வச்சுக்க கூடாதா என சந்தோஷமாக பாக்கியா பூவை எடுத்து வைத்துக் கொள்கிறார்.

பின்னர் பழனிசாமி வீட்டிற்கு கிளம்ப அவரது உடையை பார்த்து அம்மா ஆச்சரியப்பட்டு போய் இது மாதிரி உடைகள் எல்லாம் நீ போட மாட்டியே என்று கேட்க இனிமே போடுவேன் என்கிறார். பின்னர் பாக்யா தன்னை காதலிப்பதாக கூற அப்போ தேதி பார்த்து விடலாமா என்கிறார். அதெல்லாம் இப்ப வேண்டாம் கொஞ்ச நாள் போகட்டும் என்று சொல்லி இன்றைய எபிசோடு முடிகின்றது.